இந்தியா 2020-இல் வல்லரசு ஆகுமா?
ஒரு ரெண்டு வருஷம் முன்னாடி வரையும் இது தான் ஹாட் டாப்பிக். நானும் பத்தாவது பன்னண்டாவது படிக்கும்போதெல்லாம் உணர்வு பூர்வமாக இதனுடன் ஒன்றி இருந்தேன்...
என்னோட இ-மெயிலின் கடவுச்சொல்லாக (சொற்களாக - Passphrase) நான் ஒரு வருஷமாக வைத்துக் கொண்டிருந்ததாலோ என்னவோ, அந்த intimacy இன்னமும் கிடைத்துக் கொண்டிருக்கிறது...
இப்போது ஒரு நாலைந்து மாதங்களாக இது தான் என்னை பேஜார் பண்ணிக் கொண்டிருக்கிறது.ஒரு மாயையில் சிக்கிக் கொண்ட மாதிரி.
நீங்கள் போட்டு வைத்த கணக்கு உங்கள் கண்முன் வீழ்வதைப் பார்ப்பதே மாயை என்று சுமாராக define பண்ணலாம் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது...
சோவியத் மாயையைப் பற்றி ஜெயகாந்தன் எழுதியதைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் என்ற ஆசை அவ்வப்போது எழுகிறது...
சில ஏமாற்றங்கள் வாழ்க்கைக்கு சுவை கூட்டுகின்றன... சில வெறுப்பைக் கொடுக்கின்றன... சில ஏமாற்றங்களே நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்தையும் பாதிக்கின்றன...
அப்படிப்பட்ட ஒருவனின் கலப்படமட்ட்ற தேசியத்தையும், அதனைத் தொடர்ந்த ஏமாற்றங்களும் அதன் proof-களுமே தொடர்ந்து வரும் பதிவுகளுக்கு வித்து...
நன்றி...!
10 January 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment