அக்டோபர், 2005-இல் அமலுக்கு வந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் impact எல்ல ஊடகங்களின் வாயிலாகவும் தெரிகிறது. மிக சமீபத்தில் தமிழ்நாட்டில் நெடுஞ்சாலை பொறியாளர் ஒருவருக்கு, தகவல் தருவதில் தாமதித்தமைக்காக 25000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது செய்தியாக வந்தது. இதே சமயத்தில் டெல்லியில் நடந்த முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகளின் வருடாந்திர மாநாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின்(CJI) உரையும் கவனத்தைக் கவர்ந்தது. 2 விஷயங்கள் அவருடய பேச்சில் முக்கியத்துவம் பெற்றன:
1. இந்தியாவின் தலைமை நீதிபதியை Right to Information (RTI) கட்டுப்படுத்தாது.
2. நீதித்துறையில் ஊழல் கிடையாது.
RTI பற்றி சொல்லும் போது "The Chief Justice is not a public servant. He is a constitutional authority. RTI does not cover constitutional authorities" என்று சொல்லி இருக்கிறார்.
CJI சொல்வது போல் Constituitional Authority, Public Sevant என்ற பாகுபாடு எல்லாம் RTI-இல் கிடையாது. Public Servant என்பதற்கு someone who holds a government position (either by election or appointment) என்று தான் அர்த்தம். "We are here to solve their problems" என்று டாக்டர் கலாம் சொன்னதற்கும் "The Chief Justice is not a public servant" என்ற வாதத்துகுமான வித்தியாசம் தான் "Lack of Accountability".
The Contempt of Courts (Amendment) Act, 2006 இயற்றபடுவதற்கு முன்பு வரை நீதித்துறையின் அங்கம் ஒன்றினைப்பற்றிய ஒருவரின் குற்றச்சாட்டு, உண்மையே ஆயினும் அது நீதிமன்ற அவமதிப்பாகவே கருதப்படும். அருந்ததி ராய் முதல் பலரை இந்த அஸ்திரம் தாக்கி இருக்கின்றது. ஆக, நேற்று வரை implicit dictatorship பண்ணிக் கொண்டிருந்தவர்களை ஒரு சாதரண குடிமகன் கேள்வி கேட்பதா? நியாயம் தானே!!
வரி கட்டுவோரின் பணத்தில் இருந்து சம்பளம் வாங்கினாலே அவர் 'Public Servant' ஆகிவிடுகிறார் என்கிற அடிப்படையான சிந்தனை அப்பொழுது கணம் CJI-குத் தோன்றாமல் போனது துரதிஷ்டவசமே! தான் 'Authority'-ஆக இருக்கும் இந்திய அரசியல் அமைப்பின் 14-ம் பிரிவினை அவர் கொஞ்சம் படித்துப் பார்க்கலாம். இதே நேரத்தில், "I am not questioning the Chief Justice. He is a high constitutional functionary. But since you ask me, I feel we should not keep anything back from people'' என்று திரு. சோம்நாத் சட்டர்ஜி சொல்லி இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
தேங்கி இருக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக சுப்ரீம் கோர்ட் எக்ஸ்ட்ரா-டைம் பார்க்க வேண்டும் என்ற யோசனையை நிராகரித்த CJI - நீதிபதிகளின் சம்பள உயர்வு பற்றிக் கேட்டபோது "Anyway if there is an increase in salary of other constitutional authorities, our salary will also be increased. Why should we go and bargain for this?” என்று (6th Pay Commission-ஜ மனதில் வைத்துக்கொண்டு) சொன்ன CJI, எப்படி RTI-யின் எல்லைகளை வரையறுக்கலாம்?
அடிப்படையாக, இந்த சட்டத்தின் நோக்கமே "To ensure accountability" (to hold Governments and their instrumentalities accountable to the governed) என்பதுதான். முன்னாள் CJI சபர்வால் மீதான குற்றச்சாட்டுகள் மூலம் நாம் உணர வேண்டியது என்ன?
'இந்தப்பழம் புளிக்கும்' என்று இப்படியே எல்லோரும் கை கழுவி விட்டால் சட்டத்தின் நோக்கமே நிறைவேறாமல் போய்விடும். ஏற்கனவே RTI-யின் பலத்தைக் குறைக்கும் முயற்சிகள் executive level-லில் தொடங்கிவிடிருக்கும் நிலையில், இது போன்ற மதிப்புமிக்க கருத்துக்கள் (சொன்னது CJI அல்லவா?) எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது சிந்திக்கப்படவேன்டியது.
RTI அப்படி என்னத்தான் சொல்கிறது?
தரமற்ற சாலை முதல் பாஸ்போர்ட் தாமதம் முதல் EB பில் முதல் பென்ஷன் பிரச்சனை வரை எதுவாயினும் பத்து ரூபாயுடன் உங்கள் கேள்வியை PIO-விடம் கொடுங்கள். மற்றபடி variable-time-limit எல்லாம் கிடையாது; எந்தத் துறை ஆனாலும் முப்பது நாளில் உங்களுக்குத் தகவல் வந்திருக்க வேண்டும். மீறும் கேஸ்களுக்கு ஆரம்பத்தில் பார்த்து போல் 10000, 20000 என்று அபராதம்... (கவர்மண்ட் பணத்தில் இருந்து அல்ல... சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்வார்கள்...)
RTI-யின் சிற்பி(கள்) சத்தியமாக அம்பேத்கரைவிட நுட்பமாய் செய்திருக்கிறார்கள். Great! பத்ம அவார்டு பரிந்துரைக்கிறேன்.
Loopholes மிகவும் குறைவாக உள்ள இதன் strong features:
1. கண்ட டிப்பார்ட்மென்டை எல்லாம் 'Exception List'-இல் கொண்டு வர முடியாது:
"The Central Government may, by notification in the Official Gazette, amend the Schedule by including therein any other intelligence or security organisation established by that Government or omitting therefrom any organisation already specified therein and on the publication of such notification, such organisation shall be deemed to be included in or, as the case may be, omitted from the Schedule."
2. குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் தகவல் கொடுக்காமல் இருப்பது தகவல் மறுப்பதற்கு சமம்.
"If the Central Public Information Officer or State Public Information Officer, as the case may be, fails to give decision on the request for information within the period specified under sub-section (1), the Central Public Information Officer or State Public Information Officer, as the case may be, shall be deemed to have refused the request."
3. எதற்காக தகவல் கேட்கிறீர்கள் என்று சொல்லத் தேவை இல்லை.
"An applicant making request for information shall not be required to give any reason for requesting the information or any other personal details except those that may be necessary for contacting him."
இதன் ஒவ்வொரு ஷரத்தும் "People is the king in the monarchy called Democracy" என்று வலியுறுத்துகின்றது.
சும்மா இருக்கும் போதும், சீரழிந்த சாலைகளை உங்கள் ஏரியாவில் பார்க்கும்போதும் ஒரு பத்து ரூபாய் செலவிடுங்கள்.வேலை நடக்கவில்லை என்றால் திட்டாதீர்கள்; ஒரு RTI-விண்ணப்பம் எழுதுங்கள்.
ஒவ்வொரு பத்து ரூபாயும் ஒரு investment...
முடியவில்லை என்றால், "பென்ஷன் கிரெடிட் ஆகவில்லை" என்று புலம்பும் பக்கத்து வீட்டுப் பாட்டியிடம், இப்படி ஒரு விஷயம் இருப்பதையாவது சொல்லுங்கள்.
'வளர்ந்த-இந்தியா' என்ற கனவுக்கு நீங்கள் இப்படியும் contribute பண்ணலாமே...
மற்றபடி "நான் பெருசு... நீ சின்னது..." என்றெல்லாம் bureaucracy-இல் வித்தியாசம் பார்பவர்களுக்கு சமீபத்தில் ரிலீஸ் ஆகியிருக்கும் அஞ்சாதே படத்தின் "அப்ப நீங்க கண்டுபுடிங்க... கண்டுபுடுசிட்டு வந்து சஸ்பெண்ட் பண்ணுங்க சார்" scene-ஜப் பரிந்துரைக்கிறேன்...
#தலைப்பு - நன்றி:சுஜாதா
இவற்றையும் பாருங்கள்:
ரிசர்வ் வங்கியின் இந்த முயற்சி போல எல்ல அரசுத் துறை அமைப்புகளும் முயற்சி செய்யலாமே...
http://www.parivartan.com/
http://timesofindia.indiatimes.com/File_SC_evasive_on_asset_declaration_by_judges/articleshow/2949631.cms
http://hrwpaper.blogspot.com/2007/06/cross-examination-of-chief-justice-of.html
http://www.hinduonnet.com/2005/10/07/stories/2005100703631000.htm
http://righttoinformation.gov.in
25 April 2008
24 April 2008
அகர முதல எழுத்து
அன்பர்களுக்கு வணக்கம்...
நீண்ட நாட்களாகவே blogspot.com-இன் தீவிர வாசிப்பாளனாய் இருந்தாலும் இப்பொழுது தான் எழுதுகிறேன்.
இது போன்ற blogging தளங்களில் பல விஷயங்கள் தெரிகின்றன. சில: இணையத்தில் தமிழின் பரவல், தமிழர்களின் வாசிப்புத்தன்மை, இன்றைய அச்சு இதழ்களிலும் காண முடியாத இலக்கியம், மற்றும் நல்ல விமரிசனகள்.
Transliteration மென்பொருட்களின் எளிமையும், உருபடாததும் என்னை எழுதத் தூண்டின.
இரண்டிற்கும் நன்றி.
முடிந்த வரை வாழ்வின் எதார்த்தத்தை எழுத்தில் கொண்டு வர முயற்சிக்கிறேன்.
நன்றி.
நீண்ட நாட்களாகவே blogspot.com-இன் தீவிர வாசிப்பாளனாய் இருந்தாலும் இப்பொழுது தான் எழுதுகிறேன்.
இது போன்ற blogging தளங்களில் பல விஷயங்கள் தெரிகின்றன. சில: இணையத்தில் தமிழின் பரவல், தமிழர்களின் வாசிப்புத்தன்மை, இன்றைய அச்சு இதழ்களிலும் காண முடியாத இலக்கியம், மற்றும் நல்ல விமரிசனகள்.
Transliteration மென்பொருட்களின் எளிமையும், உருபடாததும் என்னை எழுதத் தூண்டின.
இரண்டிற்கும் நன்றி.
முடிந்த வரை வாழ்வின் எதார்த்தத்தை எழுத்தில் கொண்டு வர முயற்சிக்கிறேன்.
நன்றி.
Subscribe to:
Posts (Atom)