5 May 2008

அண்டை வீட்டுப் பெரியண்ணா...

சமீபத்தில் பல வலைத்தளங்களை அணுக முடியவில்லை. என் ISP-யின் பயன்பாட்டு விவரங்கள் தரும் வலைத்தளமும் வெற்றுப் பக்கத்தையே காட்டிக் கொண்டிருக்கிறது. Grievances-இல் புகார் செய்தும் பலனில்லை. நிற்க.

பல மாதங்களாய் அமெரிக்கா முதல் பல மேற்கத்திய நாடுகள், சீனா தங்களின் Network-களை ஊடுருவுவதாக கூறிவரும் குற்றச்சாட்டு வலுப்பெற்று வரும் நிலையில் மன்மோகனும், NSA நாராயணனும், இந்தியாவும், கம்யூனிஸ்ட்களையும், பிரியங்கா-நளினியையும் தாண்டி இன்னும் யோசிக்க வேண்டியது நிறைய இருக்கிறது.

ஒலிம்பிக் ஜோதியை ஏந்தியதயே 10 தங்கப்பதக்கம் பெற்றதற்கு நிகராய்ப் பெரிதாக்கிய இந்திய அரசு கம்யூனிஸ்ட்களுக்காக பயந்து கொண்டு சீனாவுக்கு தூபம் போடுவதை நிறுத்திவிட்டு தங்களின் பக்கத்து வீட்டுப் பெரியண்ணாவைக் கொஞ்சம் நுணுக்கமாக கவனிக்க ஆரம்பிக்கலாம். திபெத் நமக்கு ஒரு எச்சரிக்கை மணி என்பதை ஏன் அவர்கள் உணரவில்லை? கம்யூனிஸ்ட் என்ற ஒரே அடையாளத்தை மட்டுமே கொண்டு சீனாவை விரும்பும் இவர்கள், traitors!!

"If Left has any future in India, India has no future left", என்று சோ. ராமசாமி சொன்னது நினைவுக்கு வருகிறது. "They don't have any problem with us. They seem to have something with them", என்று அமெரிக்கா-கம்யூனிஸ்ட் உறவைப் பற்றி நம் பிரதமரே சொன்னது அவர்களின் கம்யூனிச commitment-ஜக் காண்பிக்கும். சொந்த தேச நலன் என்பதை எல்லாம் மறந்து விட்டு கம்யூனிச கிறுக்கு பிடித்த இவர்களைப் பற்றிய சோ-வின் comment--really fitting!!

சத்தமே இல்லாமல் சீனா செய்து கொண்டிருக்கும் தாதாயிசம், மற்றும் அதி வேக ராணுவ மற்றும் உட்கட்டுமான புரட்சியில் அமெரிக்காவே அரண்டு போயிருக்கும் நிலையில் நாம் இங்கே பூச்சி பிடித்துக் கொண்டிருந்தால் இந்தியாவின் வட கிழக்கு எல்லாம் அவர்களுக்கே சொந்தமாகிவிடும். அப்புறம் சத்யராஜ் சொன்ன மாதிரி "வாயில் விரல் வைத்துக் கொண்டு போகலாம்".

DRDO முதல் பல முக்கியமான அமைப்புகளும் இன்று மனிதவளம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்கள் கவர்மெண்ட் சார்பில் hacking contest-களை நடத்தி வேல்வோருக்கு இந்தியா முதல் அமெரிக்கா வரை அத்தனை நாடுகளின் முக்கிய வெப்சைட்களையும் hack பண்ணும் வேலை கொடுக்கிறார்கள்...

இன்னும் பல "இங்கும்-அங்கும்" எழுதினாலும் நம்ம ஆட்களின் மண்டைகளில் ஏறப்போவதில்லை. ஒரு புயல் அமைதியாக அங்கே உருவாகிக் கொண்டிருக்கையில், இங்கே தேசியக் கொடிக்கு மரியாதை செய்ய மறந்து நம் மானத்தை மெக்சிகோ வரை பறக்கவிடுகிறோம்.

Really Pathetic!!